கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராஜ்(65). இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். காலையில் வந்து பார்த்தபோது கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளன. உள்ளே சென்று பார்த்த போது கடையின் மேற்பக்க கூறையை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர் கல்லாவில் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து கடையில் இருந்த அரிசி மூட்டை, கடலை மாவு மூட்டைகளை பிளேடால் கிழித்தும், பொருட்களை வாரி இறைத்தும் சென்றுள்ளார்.
மேலும், கல்லாவில் ஒரு லெட்டர் எழுதி வைத்துள்ளார், அதில் 'உயிரை பணயம் வச்சு திருட வந்தா காசு இல்லாம கல்லாவை தொடச்சி வச்சி என்னை ஏமாற்றலாமா, அதுக்குதான் இந்த குரங்கு வேலை' என எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதன் பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட வந்த நபர் கல்லாவில் காசு இல்லாததால் ஏமாற்றமடைந்து லெட்டர் எழுதி வைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.