கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் இருக்கும் அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியர் கல்லூரி மற்றும் தங்குமிடம் உள்ளது. இந்நிலையில், மருத்துவமனை கட்டிடத்திற்குள் சாரைப் பாம்பு புகுந்ததைக் கண்டு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து பாம்பு பிடிக்கும் நபர் செல்லா என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனைக்குள் வந்த செல்லா, மூன்றடி நீள சாரைப் பாம்பை பிடித்து ஒரு டப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கொண்டு விட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனைக்கு நல்ல பாம்பு புகுந்தது குறிப்பிடத்தக்கது.