ETV Bharat / state

இறந்தும் உயிர் வாழும் 'கடலூர் கர்ணன்' - 9 பேருக்கு உடல் உறுப்புகள் தானம்!

கடலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 9 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 20, 2023, 1:27 PM IST

கடலூர்: காட்டுமன்னார்கோவில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வள்ளல் பெருமான்(42). இவர் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி வள்ளல் பெருமானுக்குப் பலத்த அடிபட்ட நிலையில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாற்றப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, அங்கு அவருக்குத் தொடர்ந்து நான்கு நாட்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்.18) சிகிச்சைப் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்க அவரது மனைவி உள்ளிட்டோர் முன்வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக உயிரிழந்த வள்ளல் பெருமானின் கல்லீரல், சிறுநீரகம், கண், இதயம், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானமாகப் பாண்டிச்சேரி, சென்னை ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் 9 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டன. மூளைச்சாவு அடைந்து 9 பேருக்கு மறுவாழ்வு அளித்த அவரின் குடும்பத்தினரை மருத்துவர்கள் பாராட்டினர்.

இதையும் படிங்க: காவடி எடுத்து மகா சிவராத்திரி விழா கோலாகலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.