ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தாள்-1, தாள்-2 ஆகியவைகளுக்கான தேர்வு நேற்றும் இன்றும் நடைபெற்றன. நேற்று முதல் தாளுக்கான தேர்வு முடிந்தநிலையில் இன்று இரண்டாம் தாளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதிலும் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் 47 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் 17 ஆயிரத்து 735 பேர் கலந்துக்கொண்டு தேர்வை எழுதினர்.
இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தேர்வு எழுத வருவதற்கு தேவையான பேருந்து வசதிகள், தேர்வு மையங்களில் குடிநீர் வசதிகள் உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு தேர்வாளரும் காவல்துறையினர் சோதனைக்கு பின்னரே தேர்வு மைய அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.