கடலூர்: மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் மாணவர்களை காலால் எட்டி உதைத்து பிரம்பால் தாக்கினார். இதையடுத்து அவரைக் காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் கிளைச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சுப்பிரமணியனிடம் பணியிடை நீக்கம் உத்தரவை சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் சத்தியன், பள்ளி தலைமையாசிரியர் குகநாதன் ஆகியோர் நேரில் வழங்கினார்கள்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்