ETV Bharat / state

'புதுச்சேரியில் எதிர்க்கட்சியினருக்கான வாய்ப்பு குறித்து நாளை தெரியும்' - தமிழிசை - Tamilisai Saundarajan Worship at Chidambaram Temple

புதுச்சேரி மாநிலத்தில் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்பது குறித்து வரும் 22ஆம் தேதி தெரியவரும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு
சிதம்பரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சிதம்பரத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு சந்திப்பு
author img

By

Published : Feb 21, 2021, 11:44 AM IST

காரைக்கால் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுமேற்கோண்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அனைவரும் கரோனா தடுப்பூசியை சுனக்கமாக இல்லாமல் இணக்கமாக செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் வாரம் ஒரு முட்டை போடுவதாக கூறுகிறார்கள். நான் மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், வாரம் 3 முட்டை போட்டால் தான் சிறப்பாக இருக்கும்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு

அதற்கான கோப்புகளை தயாரிக்கவும் உத்தரவிட்டு உள்ளேன். எனக்கு புதுச்சேரியும், தெலுங்கானாவும் இரட்டை குழந்தைகள் போல. இரண்டு மாநிலங்களையும் ஒன்றாகத்தான் பாவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வருகிற 22ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளுங்கட்சியினர் தோற்றுவிட்டால் எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது அன்று தான் தெரியவரும் என பதிலளித்தார்.

இதையும் படிங்க: உலக மக்கள் கரோனா தொற்றிலிருந்து விடுபட வழிபாடு நடத்தினேன்:தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.