தமிழ்நாட்டில் கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முந்திரிப் பருப்பு உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்திலிருந்து சுமார் ரூ. 600 கோடி அளவிற்கு முந்திரிப் பருப்பு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. முந்திரி ஏற்றுமதி நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டு வருகிறது.
முந்திரி உற்பத்தி தொழிலில் 1 லட்சம் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு, நேரடியாக வேலை செய்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் முந்திரி தொழிலையே சார்ந்துள்ளது. இந்த பெண் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள்.
கரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், முந்திரி உற்பத்தி தொழில் முடங்கியுள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள், 1 லட்சம் பெண் தொழிலாளர்கள் வருமானம், வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகிறார்கள். எனவே இவர்களுக்கு உதவும் நோக்கில் 20 கிராம் முந்திரிப் பருப்பை தமிழக அரசு கொடுக்கும் மளிகை பொருள்களுடன் சேர்க்குமாறு தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர் உற்பத்தியாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: கடலூர் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் 1700 படுக்கைகள்