தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுத் திட்டமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், சர்க்கரை, பச்சரிசி, முந்தரிபருப்பு, ஏலக்காய், திராட்சை, இரண்டடி செங்கரும்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது.
இதற்காக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதிகளான ஆயிப்பேட்டை, வெங்கடாம்பேட்டை, சத்திரம், கோரணப்பட்டு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் மூலம் ஒரு டன் செங்கரும்பிற்கு 6ஆயிரத்து 660 ரூபாய்க்கு கொள்முதல் விலை வைத்து வாங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அரசு தங்களுக்கு ஏற்ற விலையை கொள்முதல் விலையாக நிர்ணயித்திருப்பது லாபகரமாக இருப்பதாகவும், தமிழ்நாடு அரசு பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்புகளை கொள்முதல் செய்வதால் கடந்தாண்டை விட இந்த ஆண்டு விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பை ஆர்வமுடன் பயிரிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ‘13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள்’ - உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!