ETV Bharat / state

ஓய்வுபெறும் நேரத்தில் கையூட்டு பெற்று கைதான சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர்!

author img

By

Published : Feb 26, 2020, 11:42 PM IST

கடலூர்: விருத்தாசலம் அருகே ஓய்வுபெறும் நேரத்தில் மூன்றாயிரம் ரூபாய் கையூட்டு பெற்ற சமூகநலத் துறை விரிவாக்க அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட அண்ணாநகர் பகுதியில் வசிப்பவர் கோவிந்தராசு. இவர் தன்னுடைய மகள் தமிழரசிக்கு தமிழ்நாடு அரசின் திருமண உதவித்தொகை கேட்டு விருத்தாசலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநலத் துறை விரிவாக்க அலுவலரிடம் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவைப் பெற்றுக்கொண்ட சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா, கடந்த வெள்ளிக்கிழமையன்று கோவிந்தராசுவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். பின்னர், கோவிந்தராசுவிடம் மூன்றாயிரம் ரூபாய் கையூட்டு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கோவிந்தராசு, லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுரைப்படி கோவிந்தராசு ரசாயனம் தடவிய பணத்தை சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபாவிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா, இடைத்தரகர் கார்த்திக் ஆகியோரைக் கையும் களவுமாகப் பிடித்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

கைதுசெய்யப்பட்ட சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா

இன்னும் இரண்டு நாள்களில் சமூகநலத் துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா ஓய்வுபெறவுள்ள நிலையில் கையூட்டு வாங்கி லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் மாட்டிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலக ஊழியர்... கையும் களவுமாக கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.