கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மாவட்ட தகவலியல் மைய அலுவலர் அறையினுள் ஒரு பாம்பு நுழைந்தது. அப்போது அங்கு பணியாற்றும் அலுவலர்களும் மனு கொடுக்க வந்த பொதுமக்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர் செல்லா, தகவலியல் மைய அலுவலர் அறைக்குள் நுழைந்த சாரை பாம்பை பிடித்தார். இதையடுத்து அந்த பாம்பு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடப்பட்டது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சாரை பாம்பு நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.