தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டு ரோட்டில் பொதுப்பணித் துறை பொறியாளர் கணேசன் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கும்பகோணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனத்தை சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி, ரூ.27 லட்சம் மதிப்பிலான 37 கிலோ எடைக் கொண்ட வெள்ளி பொருள்கள் சிக்கின.
அவற்றைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். முதல்கட்ட தகவலில், அந்த வெள்ளிப்பொருள்கள் கும்பகோணத்தை சேர்ந்த சசிகுமார் என்பவருடைய என்பதும், அவர் அப்பகுயில் நகைக்கடை வைத்திருப்பதும் தெரியவந்தது. தற்போது அவற்றின் ஆவணங்கள் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் 80 கிலோ எடையுடைய போதை பொருள்கள் பறிமுதல்!