கடலூர் மாவட்ட விருதாச்சலத்தில், ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமி மஸ்ஜித்தில் ஷரீஅத் என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டம் குறித்த விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஜமா அத்துல் அலமா சபை தலைவர் சபியுல்லாஹ், காட்டுமன்னார்குடி வட்டார தலைவர் முஹம்மது அஹ்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணை கைதியாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும், புல்வாமா தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்தும் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
விருத்தாசலத்தில் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு
கடலூர்: விருத்தாசலத்தில் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
கடலூர் மாவட்ட விருதாச்சலத்தில், ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமி மஸ்ஜித்தில் ஷரீஅத் என்றழைக்கப்படும் இஸ்லாமிய சட்டம் குறித்த விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஜமா அத்துல் அலமா சபை தலைவர் சபியுல்லாஹ், காட்டுமன்னார்குடி வட்டார தலைவர் முஹம்மது அஹ்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணை கைதியாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும், புல்வாமா தாக்குலுக்கு கண்டனம் தெரிவித்தும் வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
Body:கடலூர் மாவட்ட விருதாச்சலத்தில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் விருத்தாசலம் ஆலடி ரோடு நவாப் ஜாமிஆ மஸ்ஜித் மாபெரும் ஷரீஅத் விழிப்புணர்வு மாநாடு கடலூர் மாவட்ட ஜமா அத்துல் அலமா சபை தலைவர் சபியுல்லாஹ், கட்டுமன்னார்குடி வட்டார தலைவர் முஹம்மது அஹ்மது ஆகியோர் தலைமையில் நடைபெற்றது
விருத்தாசலம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் முஹம்மது உஸ்மான், முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசினார், வழி காட்டுக் குழு மாநில கமா அத்துல் உலமா சபை அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி, கடலூர் மாவட்ட அரசு காஜி நூருல் அமீன் மன்பயீ, தமிழ்நாடு மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி, சென்னை அடையாறு இமாம் சதீதுத்தீன் பாகவி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் முடிவில் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் முகமது ஷேக் நன்றியுரை கூறினார்
இக்கூட்டத்தில் பத்தாண்டுகளுக்கு மேல் விசாரணை கைதியாக சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்,
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் நம் இந்திய தேசத்திற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்
சமீபத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த கொடுமையை கண்டித்தும் அது சம்பந்தமாக அனைத்து குற்றவாளிகளையும் விரைவில் நீதிமன்றத்தின் மூலம் உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் எனவும்
சமீப காலமாக நம் நாட்டில் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் அலைபேசியை பள்ளி, கல்லூரிகள், தடை செய்ய வேண்டும் எனவும் பெற்றோர்களும் இந்த விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும் எனவும்
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையை தரம் உயர்த்தி நவீனமயமாக்கப்பட்ட வேண்டும் எனவும்
திட்டக்குடி வேப்பூர் ஸ்ரீமுஷ்ணம் காட்டுமன்னார்குடி ஆகிய வட்டங்களை இணைத்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் எனவும்
விருத்தாசலம் கம்மாபுரம் சேத்தியாதோப்பு ஏரிக்கரையில் லால்பேட்டை வழியாக காட்டுமன்னார்குடி அரசு பேருந்து இயக்க வேண்டும் எனவும்
பெண்களின் பாதுகாப்பு கருதி விருதாசலம் மட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் எனவும் மாநாடு வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது
பேட்டி முஹம்மது அலி
செயலாளர் கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை
Conclusion: