Sexual harassment: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஏகே குச்சிபாளையத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி நேற்று முன்தினம் (ஜனவரி 12) காலை, பண்ருட்டி சென்னை சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில் கை, கால்கள் முறிவுற்று படுகாயமடைந்த மாணவி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.
நர்சிங் பயின்று வரும் மாணவி, கல்லூரி நிர்வாகத்தினர் சார்பாக மருத்துவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு இவருடன் சேர்த்து மேலும் இரண்டு மாணவிகளுக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இதைப் பற்றி வெளியில் சொல்லாத மாணவி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் சம்பந்தபட்ட ஆசிரியர் மற்றும் உடந்தையாக இருந்த மேலாளரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இரண்டு ஆசிரியர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழர்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும் - எடப்பாடி பழனிசாமி