ETV Bharat / state

கடலூர் உள்ளாட்சித் தேர்தல் - கேஎஸ் அழகிரி வாக்குப்பதிவு

author img

By

Published : Dec 30, 2019, 3:01 PM IST

கடலூர்: கீரப்பாளையம் ஒன்றியத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி  வாக்குப்பதிவு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி வாக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்று வருகிறது. இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் ஒரு ஒன்றிய கவுன்சிலர், 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 379 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமுள்ள 3,038 பதவியிடங்களில் 393 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதமுள்ள 2,645 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி வாக்குப்பதிவு

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 60 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 619 பேரும், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 1,277 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,840 பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி தனது வாக்கினை பதிவு செய்தார்.

இதையும் படிங்க:

குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு

Intro:கடலூர் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி வாக்களித்தார்Body:கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

கடலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 2,645 பதவியிடங்களுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமையன்று முதல்கட்டத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இரண்டாம் கட்டத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி, நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெறுகிறது.

இதில், 12 மாவட்ட கவுன்சிலர், 123 ஒன்றிய கவுன்சிலர், 342 பஞ்சாயத்துத் தலைவர், 2,397 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 1 ஒன்றிய கவுன்சிலர், 13 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 379 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தமுள்ள 3,038 பதவியிடங்களில் 393 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மீதமுள்ள 2,645 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 60பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 619 பேரும், பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 1,277 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு 5,840 பேரும் போட்டியிடுகின்றனர். இவர்களைத் தேர்வு செய்வதற்காக 1,292 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 6,01,163 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இத்தேர்தல் பணியில் சுமார் 14 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவதோடு, சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும் கடலூர் மாவட்டம் மேல்குமாரமங்கலம் ஊராட்சியில் தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். அதேபோல் கீரப்பாளையம் ஒன்றியத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே எஸ் அழகிரி வாக்களித்தார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.