கடலூர்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆறு மாத சிறை தண்டனை வழங்கியதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவருக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைதண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நான்கு வழக்குகளில் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இந்த நான்கு வழக்குகளிலும் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் ஒரு PT வாரண்ட் வழங்கப்பட்டிருந்தது. அந்த PT வாரண்டில் நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜரானார்.
அதனை தொடர்ந்து இன்று காலை 9:30 மணிக்கு கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். மதுரையில் தினமும் காலை கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் விதிமுறைகளை வழங்கி உள்ள நிலையில் நாளை முதல் அவர் மதுரை நீதிமன்றத்தில் கையெழுத்திடுவார் என தெரியவருகிறது.
இதையும் படிங்க: பிடிஆரை கலாய்த்த ஐ.பெரியசாமி.. அமைச்சர்கள் மோதலுக்கு காரணம் என்ன?