ETV Bharat / state

பொங்கலை முன்னிட்டு மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்! - cuddalore pot making

கடலூர்: குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராம மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் திருநாளை முன்னிட்டு மண்பானை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

மண் பானை தயாரிக்கும் பணி
மண் பானை தயாரிக்கும் பணி
author img

By

Published : Jan 15, 2020, 10:46 AM IST

தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தில், பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்திலிருந்து வரவழைக்கப்பட்ட களிமண் கட்டிகளை உடைத்து, தூளாக்கி பசை போன்று பதப்படுத்துகின்றனர். பின்னர், மண் கலவையை உருவாக்கி, பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் சுழலவிட்டு பானை தயாரிக்கின்றனர். ஈரப்பதம் உள்ள பானைகளையும், மண் அடுப்புகளையும், உலரவைத்து, சூளை மூட்டி சுட்ட பிறகு, வெயிலில் காய வைத்து, விற்பனைக்கு கொண்டுவருகின்றனர்.

மண் பானை தயாரிக்கும் பணி

இது குறித்து, பானை தயாரிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஒரு பானை தயாரிக்க அரை மணி நேரம் ஆகும் எனவும் நாள் ஒன்றுக்கு 25 முதல் 40 பானைகள் தயாரிப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும், ஐந்து படி கொள்ளளவு கொண்ட பானை 100 ரூபாய்க்கும் மூன்று படி அளவு கொண்ட பானை 60 ரூபாய்க்கும் மற்ற சிறிய அளவு பானை 40 ரூபாய்க்கும் விற்பனை செய்வதாகக் குறிப்பிட்ட அவர்கள், மண் அடுப்புகளை ரூபாய் 100 முதல் 200 ரூபாய்வரை விற்பனை செய்வதாகக் கூறினர்.

தங்கள் பகுதியில் தாங்கள் தயாரிக்கும் பானைகளுக்கு மண் அடுப்புகளுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் தை பொங்கலுக்காக முன் கூட்டியே மக்கள் அதிகமாக வந்து வாங்கிச் சென்றதாகக் கூறுகின்றனர். இந்த வருடம் மழை பெய்து விவசாயம் நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும் எனக் கருதுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: கரும்பு விளைச்சல் அதிகரிப்பு - உருட்டு வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

Intro:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பானை தயாரிக்கும் பணி தீவிரம்
Body:"தை" முதல் நாளில் தமிழர் பண்டிகையான பொங்கல், கொண்டாப்படுகிறது. விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, கொண்டாடப்படும் இந்த பண்டிகையில், மண் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய இடம் பெறும்,
கிராமங்கள் மற்றும் நகர பகுதிகளில், மண் பானையில் பொங்கல் வைத்து, சூரியனை பகவானை வழிபடுவர்.

"தை" பொங்கல் பண்டிகை நெருங்குவதால், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம் கிராமத்தில்,பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் இருந்து, வரவழைக்கப்பட்ட களிமண் கட்டிகளை உடைத்து, தூளாக்கி பசை போன்று பதப்படுத்துகின்றனர். பின்னர், மண் கலவையை உருவாக்கி, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் சுழலவிட்டு பானை தயாரிக்கின்றனர்.

ஈரபதம் உள்ள பானைகளையும், மண் அடுப்புகளையும், உலர வைத்து, சூளை மூட்டி சுட்ட பிறகு, வெயிலில் காய வைத்து, விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, பானை தயாரிக்கும் பெருமாள், மற்றும் தையல்நாயகி கூறுகையில்,

ஒரு பானை தயாரிக்க, அரை மணி நேரம் ஆகும் எனவும், நாள் ஒன்றுக்கு, 25 முதல், 40 பானைகள் தயாரிப்பதாகவும் கூறுகின்றனர்.

மேலும் ஐந்து படி கொள்ளளவு கொண்ட பானை, 100 ரூபாய்க்கும், மூன்று படி அளவு கொண்ட பானை 60 ரூபாய்க்கும், மற்ற சிறிய அளவு பானை, 40 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறோம் எனவும் மண் அடுப்புகளை ரூபாய் 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்வதாக தெரிவிக்கின்றனர்.

எங்கள் பகுதியில் நாங்கள் தயாரிக்கும் பானைகளுக்கு, மண் அடுப்புகளுக்கும், மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால், தை பொங்களுக்காக, முன் கூட்டியே, மக்கள் அதிகமாக வந்து வாங்கி செல்வதாக கூறுகின்றனர்.

இந்த வருடம் மழை பெய்து விவசாயம் நன்றாக இருப்பதால், விற்பனை அதிகரிக்கும் என கருதுகிறோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.