ETV Bharat / state

மண்ணெண்ணெய் கலந்த டீசல் விற்பனை - பெட்ரோல் பங்க் முற்றுகை! - பொதுமக்கள் ஆவேசம்

கடலூர்: நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் மண்ணெண்ணெய் கலந்த டீசலை விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

sale-of-kerosene-laden-diesel-public-besieging-petrol-stock

author img

By

Published : Aug 13, 2020, 10:03 PM IST

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகேவுள்ள வான்பக்கம் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் நெல்லிக்குப்பம் பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில், சென்னை செல்வதற்காக தன்னுடைய வாகனத்தில் டீசல் நிரப்பியுள்ளார். அதன்பின் கடலூர் செல்வதற்குள்ளாகவே வாகனத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வாகனத்தை தற்காலிகமாக பழுது நீக்கி சென்னை சென்ற பாபு, திரும்பி வரும்பொழுது வாகனத்தின் பழுதை நீக்க புதுச்சேரியிலுள்ள மெக்கானிக் கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு வாகனத்தின் பழுதை சோதனை செய்து பார்த்த பொழுது டீசலில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து டீசல் நிரப்பிய பெட்ரோல் பங்க்கிற்கு சென்று கேட்டபொழுது, அங்கு யாரும் முறையான பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பாபு பெட்ரோல் நிலையத்தில் நிரப்பப்படும் டீசலை பிடித்து, பொதுமக்களிடம் காண்பித்தபோது அதில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது பொதுமக்களுக்கு தெரிய வந்தது.

ண்ணெண்ணய் கலந்த டீசல் விற்பனை

அதன் பின் அங்கு பெட்ரோல், டீசல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லிக்குப்பம் காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்கா:வரதட்சணை கொடுமை: மனைவியின் ஆபாச படத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.