ETV Bharat / state

தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது - சாகித்ய அகாடமி விருது

தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய அகாடமி விருது

author img

By

Published : Mar 12, 2021, 4:56 PM IST

Updated : Mar 12, 2021, 9:26 PM IST

16:51 March 12

தமிழ் எழுத்தாளர் இமையம் எழுதிய 'செல்லாத பணம்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி கடந்த 1955ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. 

அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம்,கழுதூரைச் சேர்ந்த எழுத்தாளர் இமையம் சாகித்ய அகடாமி விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலை என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் இமையம், 'கோவேறு கழுதைகள்' என்ற தனது முதல் நாவல் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானவர். இவரின் 'செல்லாத பணம்' என்ற நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.  சாகித்ய அகாடமி விருது பெறுபவர்களுக்கு தாமிரப் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. 

சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஸ்கர்’ விருது மர நாய் என்ற கவிதை தொகுப்பை எழுதிய எழுத்தாளர் சக்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Mar 12, 2021, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.