ETV Bharat / state

கடலூர் மத்திய சிறையில் பிரபல ரவுடி தற்கொலை முயற்சி!

கடலூர் மத்திய சிறைக்குள் பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் தற்கொலை முயற்சி செய்த நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 17, 2023, 10:08 AM IST

கடலூர்: கடலூர் மத்திய சிறையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக ரவுடி எண்ணூர் தனசேகரன் விசாரணை கைதியாக உள்ளார். இவர் மீது 30 க்கும் மேற்பட்ட கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலூர் மத்திய சிறையில் சிறை காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது எண்ணூர் தனசேகரன் அறையில் செல்போன் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை பறிமுதல் செய்த சிறை உதவி ஜெயிலர் மணிகண்டனுக்கு எண்ணூர் தனசேகரன் கொலை மிரட்டல் விடுத்தார்.

மேலும் கூலிப்படையை வைத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உதவி ஜெய்லர் மணிகண்டனின் வீட்டிற்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து குடும்பத்துடன் கொலை செய்ய முயற்சித்தார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த வழக்கில் தனசேகரன் மற்றும் அவரது கூலிப்படையினர் அவரது மனைவி என 11 பேர் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். இன்று (பிப்.17) அதிகாலை அளவுக்கு அதிகமாக பிபி மாத்திரைகளை சாப்பிட்டு சிறைக்குள் மயங்கி விழுந்துள்ளார் தனசேகரன். இதனை தொடர்ந்து சிறை ஊழியர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எண்ணூர் தனசேகரன் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலைக்கு முயன்றரா? என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இங்க எதுக்குடா வரீங்க..? ரயிலில் வடமாநில இளைஞர்கள் மீது தாக்குதல் - வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.