ETV Bharat / state

நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - பகீர் சிசிடிவி காட்சி! - சிசிடிவி  காட்சி

கடலூர் : வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக திருட முயற்சித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மணமாக திருட முயற்சித்த இளைஞர்
author img

By

Published : Oct 15, 2019, 11:42 AM IST

Updated : Oct 15, 2019, 11:54 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் வசிக்கும் தாமஸ்(40), இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து செல்ஃபோனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்துள்ளது.

வி.என்.ஆர் நகர் முதன்மை சாலையில் நிர்வாணமாக திருட முயற்சித்த இளைஞர் - சிசிடிவி காட்சி

அப்போது குழந்தை அழுத சத்தம் கேட்ட அவரது குடும்பத்தினர் எழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மின்விளக்கு வெளிச்சத்தில் ஜன்னல் வழியாக மர்ம நபர் செல்ஃபோனை திருட முயற்சித்ததை அறிந்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர் அங்கிருந்து சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றார். அப்பகுதி மக்கள் துரத்தி சென்றும் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் திருட முயற்சித்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளைக் கொண்டு பார்த்த போது, அந்த இளைஞர் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாமல் நிர்வாணமாக கையில் கம்பை எடுத்துக்கொண்டு சுவர் ஏறி குதித்து, ஜன்னல் மீது ஏறி திருட முயற்சித்தது தெரிய வந்தது.

இது குறித்து அறிந்த விருத்தாச்சலம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு திருட முயற்சித்த இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க:

முகமூடியாய் மாறிய குப்பைக் கூடை - கொள்ளையர்களின் புதிய அவதாரம்!

Intro:விருத்தாச்சலத்தில் நிர்வாணமாக வந்து திருட முயற்சித்தவரால் பரபரப்பு : சிசிடிவி கேமரா காட்சி
Body:கடலூர் மாவட்டம்
விருத்தாச்சலம் வி என் ஆர் நகர் முதன்மை சாலையில் வசிப்பவர் அப்துல் மஜித் (60), இவர் இரவு குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த வாலிபர் ஒருவர் உடலில் துணி எதுவுமே இல்லாமல் நிர்வாணமாக அகோரி வடிவில் வந்துள்ளார். அவரது வீடு உள்பக்கம் தாழ்ப்பாள் போட்டிருந்ததால் அருகில் உள்ள தாமஸ் 40 என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அவரது வீடும் உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஜன்னல் கதவை திறந்து செல்போனை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தை அழுததால் அவரது குடும்பத்தினர் எழுந்து மின் விளக்கை போட்ட போது ஜன்னல் வழியாக மர்ம நபர் செல்போனை திருட முயற்சித்ததை அறிந்து சத்தம் போட்டுள்ளனர். அப்போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ரம்ஜான் அலி 60 என்பவரது வீட்டு வழியாக சுற்று சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளார். அப்பகுதி மக்கள் துரத்தி சென்றும் பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் திருட முயற்சித்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை கொண்டு பார்த்த போது அந்த வாலிபர் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக கையில் கழியை எடுத்துக்கொண்டு சுவர் ஏறி குதித்து ஜன்னல் மீது ஏறி திருட முயற்சிப்பதும், தப்பிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இது குறித்து அறிந்த விருத்தாசலம் போலீசார் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கொண்டு திருட முயற்சித்த வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
Last Updated : Oct 15, 2019, 11:54 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.