ETV Bharat / state

வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு பதிலாக தீவனமாக மாற்றலாம் - சுற்றுச்சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில் - how to control locust attack

சென்னை: வெட்டுக்கிளிகளை மருந்து தெளித்து அழிப்பதற்கு பதிலாக அவற்றை கோழிகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக மாற்றலாம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் கருத்து தெரிவித்துள்ளார்.

locust explained by sultan ismail
locust explained by sultan ismail
author img

By

Published : May 29, 2020, 10:56 PM IST

Updated : May 30, 2020, 1:38 PM IST

வட மற்றும் வட மேற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் மருந்து தெளித்து வெட்டுக்கிளிகளை விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வாளர் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் ஈடிவி பாரத் செய்தியாளருடன் நடத்திய உரையாடலில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

தமிழ்நாட்டுக்கு வர வாய்ப்பிருக்கிறதா...

தமிழ்நாட்டுக்கு இந்த வெட்டுக்கிளிகள் படை வர வாய்ப்பில்லை என அரசு தெரிவித்துள்ள நிலையில், பசுமை எங்கிருக்கோ அதனை நோக்கி வெட்டுக்கிளிகள் செல்லும் என்கிறார் அவர். வெட்டுக்கிளிகளின் வலசை (மைகிரேஷன்) குறித்து பேசுகையில், "தட்ப வெப்ப நிலை, காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் திசை, பச்சை வெளி போன்றவற்றை வைத்து வெட்டுக்கிளிகள் தங்களது அடுத்த இடத்தை தேர்வு செய்கின்றன.

தமிழ்நாட்டுக்கு இதுவரை வராததால், நமக்கு வர வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் எப்போதும் ராஜஸ்தான் மாநிலத்துடன் திரும்பிச் செல்லும் வெட்டுக்கிளிகள் தற்போது அதனைத்தாண்டி தெலங்கானா வரை வந்திருக்கிறது. அதேபோல் ஊட்டி, வயநாடு பகுதியிலும் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை எந்த வகையான வெட்டுக்கிளிகள் என தெரியாது, ஆனால் வந்தால் என்ன செய்ய வேண்டும் என விவசாயிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.

விவசாய நிலங்களில் ஈக்கள் போல் மொய்த்த 'பாலைவன வெட்டுக்கிளிகள்'

வெட்டுக்கிளிகளை எப்படி கட்டுப்படுத்துவது...

வெட்டுக்கிளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த இரண்டு வகைகளை கையாளலாம், ஒன்று பூச்சியை தாக்குவது, மற்றொன்று அந்த பயிரை வெட்டுக்கிளிகளுக்கு பிடிக்காத வகையில் மாற்றுவது. பல நாடுகளில் மாலத்தியான் போன்ற மருந்துகளை தெளிக்கிறார்கள்.

இந்தியாவில் பல இடங்களில் தீயணைப்பு வாகனங்களில் ரசாயன மருந்து தெளிக்கப்படுகிறது. இவை கட்டடங்களில் தீப்பற்றினால், அதனை அணைக்க பயன்படுத்த முடியும், ஆனால் பயிர்களுக்கு தெளிக்க இது பயன் தருமா என்பது கேள்விக்குறியே. வெட்டுக்கிளிகளை தடுக்க மெல்லிசாக சாரல் போன்று மருந்து அடிக்க வேண்டும். இதற்காக டிரோன்கள், விவசாயிகளுக்கு சிறிய அளவிலான டிஸ்க் ஸ்பிரேயர்கள் பலனளிக்கும்.

இயற்கை முறையில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயன்படுத்தலாம். போராக்ஸ் பயன்படுத்தினால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது, அதேநேரத்தில் வெட்டுக்கிளிகள் மயங்கி விழும் என்கிறார்கள்".

உணவு சங்கிலியில் ஏற்பட்ட மாற்றம்...

உணவுச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால்தான் தற்போது வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், பல்லுயிர் சமன்பாடு குறைந்ததே இந்தப் பிரச்னைக்கு காரணம் என கூறுகிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். "பறவைகள் பூச்சிகளை சாப்பிடும் அவை இருந்திருந்தால் இந்த அளவுக்கு வெட்டுக்கிளி பிரச்னை இருக்காது என்கிறார்கள்.

வெட்டுக்கிளிகளை கொல்வதால் நீண்ட கால பாதிப்பு!

அதேபோல், பூராண், பல்லி, சிறிய பாம்புகள் மண்ணுக்குள் இருந்தால் வெட்டுக்கிளிகள் மண்ணுக்குள் முட்டையிடும் போது அவற்றை சாப்பிட்டுவிடும். நாம் அவற்றை ரசாயன உரங்களை பயன்படுத்தி அவற்றை அழித்துவிட்டோம்" என்று கூறினார்.

ரசாயன தெளிப்பானில் இருக்கும் ஆபத்துகள்...

தற்போது உடனடி பாதிப்பை சமாளிக்க ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால் நீண்ட கால சூழல் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது, அதேபோல் இவை மனிதர்களுக்கும் ஆபத்தாய் அமைய வாய்ப்புள்ளது என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் என்டோசல்ஃபன் (endosulfan) மருந்து பயன்படுத்தப்பட்டு அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் குறைபாடு, மன வளர்ச்சி குன்றுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.

சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயில்

பூச்சிக்கொல்லிகள் எதற்கு; தீவனமாக்குங்கள்...

இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க, ரசாய மருந்துகளை தெளித்து வெட்டுக்கிளிகளை கொல்வதற்கு பதிலாக அவற்றை கோழிகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக மாற்றலாம் என்கிறார் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில். "தமிழ்நாடு அரசு இங்குள்ள டிரோன்களை சேகரித்து, அவற்றின் மூலம் இயற்கை மருந்து கரைசல்களை தெளித்து சோதனை ஓட்டங்கள் செய்யலாம். நீலகிரி போன்ற பகுதிகளில் முதல்கட்டமாக இதுபோல செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.

வெட்டுக்கிளிகள் புரதச் சத்து நிறைந்தது. அதை கொல்வதைவிட்டு அவற்றை கோழிகள் போன்ற கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்த முடியும். இதனை ஒரு பிரச்னையாக பார்ப்பதை தவிர்த்து இதனை உணவாக மாற்ற முயற்சிக்க வேண்டும். தொழில்நுட்பம் மூலமாக புதிய முயற்சிகள் மேற்கொண்டு இதற்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறினார்.

Last Updated : May 30, 2020, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.