கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். மாணவிகளுக்கு பிரத்யேகமாக கோல போட்டி, கபடி போட்டி போன்ற பல பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் பரதம், கும்மி, காவடி, வில்லுப்பாட்டு, சிலம்பம், தப்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் பங்கேற்ற மாணவிகள் கூறுகையில், "தமிழர் திருநாளான பொங்கலில் கதிரவனுக்கும், தங்களோடு உழைத்த கால்நடைகளுக்கும், நன்றி பாராட்டும் திருவிழாவாக ஒட்டுமொத்த தமிழர்களும் கொண்டாடும் பாரம்பரிய விழாவாகும்" என்றனர்.
இதையும் படிங்க: இந்தாண்டு கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!