கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் செல்போன் திருட்டு வழக்கில் நெய்வேலி காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். பின்னர், விருதாச்சலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார்.
இதில் நெய்வேலி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினர் அவரை அடித்து சித்ரவதை செய்ததால்தான் செல்வமுருகன் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், செல்வமுருகன் மரணம் தொடர்பாக கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு அரசுக்கும், டிஜிபிக்கும், தேசிய மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையும் படிங்க...'கஸ்டடி மரணங்களை மறைத்து தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்' - ஸ்டாலின்