ETV Bharat / state

கரோனாவுடன் வெளியூர் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு போலீஸ் வலைவீச்சு - தமிழ்நாடு கரோனா செய்திகள்

கடலூர்: சிதம்பரம் அருகே கரோனா உறுதி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், வெளியூருக்குச் சென்றதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் தேடி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Police website for three members of the same family who went out with Corona

author img

By

Published : Jun 23, 2020, 5:58 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஆணிக்காரன் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஒரு குடும்பம், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சென்று ஊர் திரும்பிவுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டது

அச்சோதனையின் முடிவில் அக்குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை என மூன்று பேருக்கும் கரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அவர்களது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் வெளியூர் சென்றிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் அப்துல் கபார், அவர்கள் மூவர் மீதும் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், கரோனா தொற்றுடன் வெளியூருக்கு தப்பிச் சென்ற மூவரையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.