கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மணலூரில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கிவருகிறது. இந்தப் பணிமனையில் பட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில், புதிதாக திமுக ஆட்சி அமைந்தவுடன் பட்டாளி தொழிற்சங்க ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வழக்கமான வழித்தடங்களில் பணி வழங்குவதில்லை என பாட்டாளி தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுகவில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே வழக்கமான வழிதடத்தில் பணி வழங்கப்படும் என மேலாளர் கூறுவதாகவும் அச்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மனு அளிப்பதற்கு அத்தொழிற்சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அசோக்குமார் தலைமையில் பாட்டாளி தொழிற்சங்கத்தினர் பணிமனை முன்பு ஒன்றுகூடியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த மேலாளர், தொழிற்சங்கத்தினரை சமாதானப்படுத்தினர்.
அதன்பின்பு, அவர்கள் கொண்டுவந்த மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் வெளியே கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு- ஜி.கே மணி கோரிக்கை