ETV Bharat / state

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை தேவை - ஜி.கே.மணி - PMK Leader GK Mani

கடலூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து வரும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் ஜி.கே மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜி. கே மணி
author img

By

Published : Jun 12, 2019, 12:17 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள குறவன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் மகன் பிரேம்குமார் (20) முகநூல் மூலம் ஆபாச கருத்துகளை ராதிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

செய்தியாளர்களை சந்திக்கும் ஜி.கே மணி

இதைப்பார்த்து அத்திரமடைந்த ராதிகா அந்த இளைஞரை திட்டி மறுபதிவு செய்துள்ளார். இந்த பதிவைப் பார்த்த பிரேம்குமாரின் உறவினர்கள், ராதிகா வீட்டிற்கு வந்து பிரச்னை செய்ததுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி ராதிகா அன்றைய தினமே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த ராதிகாவின் மாமன் மகனும், காதலனுமான விக்னேஷ், மாணவி இறந்த துக்கம் தாங்கமால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் பிரேம்குமார் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் முன் சரணடைந்தார். இதனிடையே பாமக தலைவர் ஜிகே மணி உயிரிழந்த ராதிகாவிற்கு அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளகளிடம் பேசுகையில், ’கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோல் ஒரு கும்பல் பெண்களை இழிவுபடுத்தியும், ஒருதலைக் காதலால் கொலை செய்தும் வருகின்றனர். இவர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கவில்லை என்றால் பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.

*கடலூரில் ஒரு கும்பல் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்து வருகிறது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுக்க பாமக போராட்டங்களில் ஈடுபடும் என பாமக தலைவர் ஜி.கே மணி எச்சரிக்கை*

கடலூர்
ஜூன்11,

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ள குறவன்குப்பம் பகுதியில் வசிப்பவர் நீலகண்டன். இவரது மகள் ராதிகா (19), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அதேபகுதியில் வசிக்கும் மாற்று சமுகத்தைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் பிரேம்குமார் (20). இவர் முகநூலில் ஆபாச வார்த்தைகளை பதிவு செய்து ராதிகாவிற்கு அனுப்பி வைத்தாராம். இதை அடுத்து ராதிகா திட்டி பதிவு செய்து அனுப்பியுள்ளார்.

இந்த பதிவை படித்த பிரேம்குமாரின் உறவினர்கள், ராதிகா வீட்டிற்கு மதியம் வந்து பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் அவரவர் பிள்ளைகளை கண்டித்து கொள்வதென பேசி கலைத்துப் சென்றாராம்.
இதனிடையே, முகநூல் பதிவால் மனவேதனை அடைந்த ராதிகா நேற்று மதியம் சுமார் 3.30 மணி அளவில் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

ராதிகா தற்கொலை செய்துக் கொண்டதை அறிந்த அத்தை மகனும், காதலனுமான வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த சேகர் மகன் விக்னேஷ்(23) ராதிகாவை பார்க்க வந்தவர், உயிரிழந்த ராதிகாவை பார்க்க மனமின்றி வீனங்கேணி அடுத்துள்ள செங்கால்பாளயத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் ராதிகாவின் உடலை மீட்டு கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கும், விக்னேஷ் உடலை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முகநூல் பதிவால் இருவர் தற்கொலை செய்துக்கொண்டார் சம்பவம் குறவன் குப்பம் மற்றும் பார்வதிபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக முகநூலில் ஆபாச பதிவிட்ட பன்னீர் மகன் பிரேம்குமார்  மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனிடம் சரணடைந்தார் 

இச்சம்பவத்தால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே பாமக தலைவர் ஜிகே மணி உயிரிழந்த ராதிகாவின் சடலத்தை பார்வையிட்ட பின் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பிறகு இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வனை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பாமக தலைவர் ஜி.கே மணி கூறியதாவது; கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இதுபோல் ஒரு கும்பல் பெண்களை இழிவுபடுத்தும் ஒருதலைக்காதலால் கொலை செய்தும் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்படி எடுக்கவில்லை என்றால் தமிழகம் முழுக்க பாமக மாபெரும் போராட்டம் நடத்தும்  எனவும் எச்சரித்தார்

மேலும் தற்கொலை செய்து கொண்ட ராதிகா மற்றும் விக்னேஷ் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என கூறினார்.

அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யும் வரை உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

*Video send mojo*

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.