ETV Bharat / state

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கரச் சாலையாக மாற்ற முயற்சிப்பேன்: பாமக வேட்பாளர் - பாட்டாளி மக்கள் கட்சி

கடலூர்: விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கரச் சாலையாக மாற்ற முயற்சி செய்வேன் பாமக வேட்பாளர் ரா. கோவிந்தசாமி வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பேட்டியளித்துள்ளார்.

PMK candidate files nomination in cuddalore
author img

By

Published : Mar 22, 2019, 10:04 PM IST

17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் வேட்பாளராக விருதாச்சலம் அருகே விளக்கப்பாடியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் ரா.கோவிந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று வந்த ரா. கோவிந்தசாமி, மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புசெல்வனிடம் வேட்புமனுவை இன்றுதாக்கல் செய்தார்.

பாமக வேட்பாளர் ரா. கோவிந்தசாமி வேட்புமனு தாக்கல்

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர் கூறியதாவது,

நான் 40 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்து வருகிறேன். தற்போது நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். இந்தப் பகுதி மக்களிடம் நல்ல நெருக்கத்துடன் பழகி வருவதால் அவர்களின் நிலையை நன்கு அறிவேன். அத்துடன் அவர்களின் தேவைகளை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரி - கடலூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றவும், விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கரச்சாலையாக மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன்.

சிப்காட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். என்எல்சி இந்தியா நிறுவனத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவரே நிரந்தரப்படுத்த பாடுபடுவேன்.

என்எல்சியில் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்தால் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் என்றார்.

முன்னதாக, ரா. கோவிந்தசாமி வேட்புமனு தாக்கல் செய்த போது அவருடன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், பாஜக மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக மாவட்ட தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Intro:விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கரச் சாலையாக மாற்ற முயற்சி செய்வேன் பாமக வேட்பாளர் இரா. கோவிந்தசாமி பேட்டி

Body:கடலூர்
மார்ச் 22,

விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கர சாலையாக மாற்ற முயற்சி செய்வேன் என பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் இரா. கோவிந்தசாமி பேட்டியளித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் 19ஆம் தேதி தொடங்கியது இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதியின் வேட்பாளராக விருதாச்சலம் விளக்கப் பாடியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு தலைவர் இரா.கோவிந்தசாமி நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்பு செல்வனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் 40 ஆண்டுகளாக மருத்துவ சேவை புரிந்து வரும் நான் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளேன். மேலும் மக்களிடம் நெருங்கி பழகுவதால் அவர்களின் நிலையினை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

கடலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால் கிழக்கு கடற்கரை வழியாக புதுச்சேரி- கடலூர் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றவும் விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சாவூர் சாலையை தங்க நாற்கரச்சாலையாக மாற்றவும் நடவடிக்கை எடுப்பேன்.

சிப்காட்டில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளை துவங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்தத்தில் பணியாற்றி வருபவரே நிரந்தரப்படுத்த பாடுபடுவேன்.

என்எல்சியில் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்தால் இரண்டு லட்சம் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனவே அதனை தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன் பேட்டியளித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்கையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் பாஜக மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேமுதிக மாவட்ட தலைவர் சிவக்கொழுந்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.