பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 6ஆம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
கடலூர் மாவட்டத்தில் 229 பள்ளிகளில் இருந்து 29 ஆயிரத்து 930 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 26 ஆயிரத்து 765 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் 87.51 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட 2.25 சதவிகிதம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.