ETV Bharat / state

குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குருவன் குப்பம் கிராமம்

கடலூர்: விருத்தாசலம் அருகே சரியாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

people protest for water
author img

By

Published : Oct 10, 2019, 9:51 AM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குருவன் குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர்.

இந்தக் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடி தண்ணீர் வழங்கபட்டுவருகிறது. இந்தத் தொட்டியின் மூலம் கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காலிக் குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

இதையும் படிங்க: ஆந்தாலஜி சிரீஸ்: சர்ச்சைக்குள்ளான கதாபாத்திரத்தில் அமலாபால்!

Intro:விருதாச்சலம் அருகே சரிவர குடிநீர் வழங்காததை கண்டித்து பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்Body:கடலூர்
அக்டோபர் 9,

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே குருவன் குப்பம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடி தண்ணீர் வழங்க பட்டு வருகிறது இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் கடந்த ஒரு வாரமாக சரிவர குடிநீர் வழங்கவில்லை என வலியுறுத்தி பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்கலுடன் குருவன் குப்பம் கிராமத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் தகவல் அறிந்து வந்த ஆலடி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் இந்த சாலை மறியலால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.