ETV Bharat / state

என் மகளின் சாவில் சந்தேகம் - கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர் புகார் - suicide

கடலூரில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இறந்த மாணவியின் பெற்றோர் தனது மகள் தனலட்சுமி இறப்பில் சந்தேகம் உள்ளது என கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.

என் மகளின் சாவில் சந்தேகம்- கல்லூரி நிர்வாகத்தின் மீது பெற்றோர்கள் புகார்

author img

By

Published : May 17, 2022, 10:41 PM IST

கடலூர்: செம்மண்டலம் பகுதியில் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி அமைந்துள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வரும் நிலையில், இதில் இரண்டு ஷிப்ட்களாக வகுப்புகள் நடைபெறுகின்றன. காலையில் நடைபெறும் வகுப்புகள் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும் மாலை வகுப்புகள் சுயநிதி கல்லூரியாகவும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த கல்லூரியில் விழுப்புரம் மாவட்டம், சின்னப்ப சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (19) என்ற மாணவி முதலாமாண்டு B.com படித்து வருகிறார். இவர் கல்லூரி அருகிலேயே உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று (மே 17) காலை வழக்கம்போல் கல்லூரி துவங்கிய உடன் மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். அப்போது கழிவறைக்கு சென்ற சில மாணவிகள், அங்கு மாணவி தனலட்சுமி தூக்குப்போட்டு தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு உள்ளனர்.

இதனையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மாணவிகள் அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டனர். கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினர் மற்றும் கல்லூரி முதல்வர் சென்று கழிவறையில் மாணவியின் உடலை இறக்கி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அந்த மாணவி நேற்று மாலை கல்லூரி முடிந்த உடனேயே கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அந்த மாணவியின் புத்தகப் பையை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தில் தனது சகோதரருக்கு அவர் எழுதிய கடிதத்தில், அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என்றும்; சகோதர சகோதரிகளுக்கு நன்றாகப் பாடம் சொல்லித்தா எனவும் எழுதி இருந்த மாணவி,

மானவியின் கடிதம்
மாணவியின் கடிதம்

தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயம் காரணமாக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி கடலூர் புதுநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இறந்த மாணவியின் பெற்றோர் தனது மகள் தனலட்சுமி இறப்பில் கல்லூரி நிர்வாகத்தின் மீது சந்தேகம் உள்ளது. எனவே, கல்லூரி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மாணவி தனலட்சுமி உடல் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தாய் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.