கடலூர்: கடலூர் அருகே தோட்டப்பட்டுவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த கொள்முதல் நிலையத்தில் பட்டறை போட்டு வைத்துள்ளனர்.
10க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 4) கடலூரில் கனமழை கொட்டியது. 7.3 செ.மீ அளவு பதிவான மழையால், நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டறை போடப்பட்டிருந்த நெல்மணிகள் முளைத்து வீணாகும் நிலையில் உள்ளன.
பட்டறை போட்ட நெல்லை அரசு ஈரப்பதம் பார்க்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் காக்க வைக்கமால் நெல்லை உடனடியாக வாங்கினால், மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாவதை தவிர்க்க முடியும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ‘சேமிப்பு கிடங்குகளை வாடகையின்றி தர வேண்டும்’- பிஆர்.பாண்டியன்!