கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தில் இரண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கிவருகின்றன. இந்தக் கொள்முதல் நிலையத்திற்கு கருவேப்பிலங்குறிச்சி, சத்தியவாடி, வெண்கரும்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக வென்கரூம்பூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவருவார்கள்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 28) இரவு பெய்த கனமழையால் சுமார் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகின. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். நெல் கொள்முதல் நிலையத்திற்கு மழையில் நனையாமல் இருக்க தகுந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் தொடர் மழையால் விவசாயம் பாதிப்பு!