ETV Bharat / state

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று - பாமக தலைவர் ஜி.கே. மணி - Online trading is unnecessary

கடலூர்: தனியார் திருமண மஹாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று, கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று - பாமக தலைவர் ஜி.கே. மணி
author img

By

Published : Nov 18, 2019, 8:08 PM IST

பாமக தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு சான்றுதான் சமீபத்தில் நடந்து முடிந்த இரு சட்டமன்ற இடைத்தேர்தல். அதேபோல் எங்கள் கூட்டணியின் வெற்றியை உள்ளாட்சித் தேர்தல் நிரூபிக்கும் என்றார்.

மேலும் அவர், கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வனத்துறையின் கீழ் முந்திரி காட்டில் இருக்கிறது. இந்த முந்திரி காடுகளில் விவசாயிகள் குத்தகை எடுத்து அதை அறுவடை செய்து வருவார்கள். இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு வருமானம் கிடைத்து வந்தது.

இதை தட்டிப் பறிக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற முறையில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள், வெளிநாடுகளைச் சார்ந்தவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற ஒன்று, இது கண்டனத்துக்குரியது, அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே விவசாயிகளே இந்தத் தொகையைப் பெறுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என தெரிவித்தார்.

ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று - பாமக தலைவர் ஜி.கே. மணி

உள்ளாட்சித் தேர்தல் மிக விரைவில் வரவிருப்பதால், அதிமுகவுடன் கூட்டணி பேசி எங்களுக்கான இடத்தைப் பெறுவோம், உரிமையை பெறுவோம். போட்டியிடும் அனைத்து இடங்களிலும் பாமக வெற்றிபெறும். அதேபோல் கூட்டணி கட்சி வெற்றிபெற பாமகவினர் கடுமையாக உழைப்பார்கள்’ என்றார்.

Intro:ஆன்லைன் வர்த்தக முறை என்பது தேவையற்ற ஒன்று பாமக தலைவர் ஜிகே மணி

Body:கடலூர்
நவம்பர் 18,

கடலூர் மாவட்டம் தனியார் திருமண மகாலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

அப்போது பாமக தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டு எங்கள் கூட்டணி அதிகமான இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது அதற்கு சான்று தான் சமீபத்தில் நடந்து முடிந்த 2 சட்டமன்ற இடைத்தேர்தல் விக்கிரவாண்டி நாங்குநேரி அதிமுகவை மிகப்பெரிய வெற்றி எங்கள் கூட்டணியின் வெற்றியை உள்ளாட்சித் தேர்தலை நிரூபிக்கும்.

தமிழ்நாட்டில் பாசனத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கி முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் காரணம் நீர் ஆதாரத்தில் காவிரி முல்லைப்பெரியாறு பாலாறு போன்றவற்றின் கடைமடை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அடிக்கடி உரிமை மறுக்கப்பட்டு நீர் பற்றாக்குறை ஏற்படுவது தொடர்ந்து நீடிக்கிற நிலை இப்போது மழை பெய்கிறது காவிரியில் தண்ணி வந்து இருக்கிறது ஆனாலும் கூட அடிக்கடி வறட்சி ஏற்படும் சூழல் இருப்பதால் மத்திய அரசு தமிழ்நாட்டில் இருக்கிற ஆறுகளில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் கால்வாய்கள் புதிதாக அமைப்பதற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் தமிழக அரசு இந்த பாசனத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இந்த ஆண்டு அரவை நிறுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் சர்க்கரை ஆலைகளில் சர்க்கரை ஆலை நிர்வாகம் சொல்லுவது சற்று கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது என்று சொல்கிறார்கள் இது ஒரு சாதாரண சாக்கு போக்கு சொன்னாலும் அது உண்மை அல்ல தொடர்ந்து கடந்த காலங்களில் சர்க்கரை ஆலையை அரவை திறனுக்கு மேலே கரும்பு உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது இப்படி இருக்கும்போது விவசாயிகளை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்குகின்ற சர்க்கரை ஆலை எக்காரணம் கொண்டும் அறவையை நிறுத்த கூடாது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு மட்டும் போராட்டத்தில் ஏற்படுத்தும் என்று வலியுறுத்துகிறோம் அதன் வழியே சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.

கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வனத்துறையின் கீழ் முந்திரி காட்டில் இருக்கிறது இந்த முந்திரி காடுகளில் விவசாயிகள் குத்தகை எடுத்து அதை அறுவடை செய்து வருவார்கள் இதன் மூலம் விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தளவு வருமானம் கிடைத்து வந்தது. இதைப் தட்டிப் பறிக்கும் வகையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற முறையில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் வெளிநாடுகளை சார்ந்தவர்களுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இது தேவையற்ற ஒன்று இது கண்டனத்துக்குரியது அரசு இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் கடந்த காலங்களில் இருந்ததைப் போலவே விவசாயிகளே இந்தத் தொகையைப் பெறுவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வருகிற நெய்வேலி பழுப்பு நிலக்கரி தொழில் நிறுவனம் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு இன்று வரையில் செய்யப்பட்டு வந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை உதாரணம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் நேரத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு அவங்க வீடு வீட்டுமனை குடிநீர் சுகாதாரம் கல்வி வசதி வேலைவாய்ப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றுவதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது ஆனால் நீண்ட காலமாக இயங்கி வந்த என்எல்சி மேலும் விரிவாக்கம் இப்போது மூன்றாவது யூனிட்க்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவில்லை கடலூர் மாவட்டத்தில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை இங்கே இந்த நிறுவனத்தில் ஈட்டக்கூடிய லாபத்தை எடுத்துச் சென்று உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் ஒரிசா போன்ற மாநிலங்களில் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது ஆனால் அங்கு லாபமே இல்லை நெய்வேலியில் கிடைக்கிற லாபத்தை கொண்டு அங்கே அந்த நிறுவனம் நடத்தப்படுகிறது அங்கே நிலம் கொடுத்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது வேலைவாய்ப்புக்கு வட மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டு நெய்வேலிக்கு அனுப்புகிறார் இது மோசடியிலும் மோசடி இது ஏமாற்று வேலை இது பாட்டாளி மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கை என்எல்சி நிறுவனத்தில் நிலம் இருக்கிறது நீதி இருக்கிறது அடிப்படைக் கட்டுமானத்திற்கு கொண்டு மருத்துவமனை துவங்கினாள் இந்த மாநிலத்திற்கும் பக்கத்து மாநிலத்தில் உள்ள மக்கள் பயனடைவார்கள் எனவே என்எல்சி நிறுவனம் உடனடியாக மருத்துவக்மனை துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

ராமசாமி படையாட்சியார் இன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது விரைவில் தமிழக அரசால் திறக்கப்பட உள்ளது வரவேற்கத்தக்கது பாராட்டுகிறோம் அந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி பங்கேற்கும்.

உள்ளாட்சி தேர்தல் மிக விரைவில் வர இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி பேசி எங்களுக்கு உள்ள இடத்தைப் பெறும் உரிமையை பெறுவோம் பெறக்கூடிய எல்லா இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும் அதேபோல் அதிமுகவும் கூட்டணி கட்சி வெற்றிபெறும் கடுமையாக உழைப்பார்கள் என பேட்டி அளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.