கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி வீரா (எ) வீராங்கையன் நேற்று (பிப்.16) இரவு தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், தொடர்புடைய கிருஷ்ணன் என்பவர் பண்ருட்டியை அடுத்த குடிமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், கிருஷ்ணனை கைது செய்ய காவல் துறையினர் அங்கு சென்றனர். அப்போது, அவர் காவலர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினர் கிருஷ்ணனை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர்.
கிருஷ்ணன் தாக்கியதில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இததையும் படிங்க: கடலூரில் ரவுடியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலையை வெட்டி தூக்கிச் சென்ற கும்பல்!