தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் பரவிய கரோனா வைரஸ் பாதிப்பால், அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்றதாலும், வேறு மாநிலங்களிலிருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதாலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடலூர் மாவட்டத்திலும் கரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை கரோனா பாதிப்புக்கு 416 பேர் பாதிக்கப்பட்டியிருந்த நிலையில், நேற்று (மே 17) ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 639 பேருக்கு கரோனா உறுதி