ஆந்திரப்பிரதேச மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று தனியார் பேருந்து ஒன்றில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பேருந்து, சிதம்பரம் பெரியப்பட்டு மாதா கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணம் செய்த வன்னூர் தேவநாதன் (75) என்பவர் கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.