கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பொன்னங்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர், நீலாவதி (60). கூலி வேலை செய்து வருகிறார். எழுதப் படிக்க தெரியாத இவர் திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது, திறந்த வெளியில் அமர்வதால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் என்பது உள்ளிட்ட கருத்துகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு பாட்டைப் பாடி வருகிறார்.
தனது சொந்த வரிகளை சினிமா பாடல் மெட்டில் அமைத்து, பாடி வரும் இவர் பொதுமக்களுக்கு தனது பாடல் மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
"சீரான குழிய வெட்டி, சீரான கழிவறைய அமைச்சுக்கங்க" என்று நீலாவதி பாட்டிப் பாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படியுங்க: