ETV Bharat / state

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. ஆட்சியர் வெளியிட்ட அப்டேட்! - Precautionary Measures

North East Monsoon Precautionary Measures: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

North East Monsoon Precautionary Measures intensified in cuddalore
கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 10:14 PM IST

கடலூரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கடலூர்: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது. இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ளது.

அவசர கால தொடர்புகளுக்காக 1077 என்ற தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். மாவட்டம் முழுவதும் அனைத்து துறை அரசு அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். எந்தவொரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கக் கூடிய அளவில், முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ள நேற்று (நவ.13) இரவில் இருந்து தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 125 அதிகாரிகளுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாக்கி டாக்கி மூலம் உடனடியாக தகவல்கள் பரிமாறப்படுவதால், உடனுக்குடன் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றது. எந்த ஒரு மழை வந்தாலும் அதை எதிர்கொள்ள துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். நேற்று இரவு பெய்த மழையில் கடலூர், பண்ருட்டியில் இரண்டு வீட்டு சுவர் இடிந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது.

இதில், மூன்று பேர் லேசான காயம் அடைந்துள்ளனர். இவர்கள் தற்போது புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்பெண்ணை ஆறு, மணிமுத்தாறு, கெடிலம் மற்றும் கொள்ளிடம் ஆறுகள் ஆகியவற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறோம்.

இதுவரை எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வராததால், தற்போது வரை பயப்பட வேண்டியதில்லை. நடைபாதைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று (நவ.14) காலையில் இருந்து பிற்பகல் வரை, அவசர கால பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு 10 தொலைபேசி அழைப்புகள் மட்டும் வந்தது. அவைகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளில், 239 பாதிக்கக்கூடிய கிராமங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.
உடனடியாக எந்த நிகழ்வு ஏற்பட்டாலும் அதனை சரி செய்ய அதிகாரிகள் போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நகராட்சிகளிலும் டீசல் என்ஜின் மூலம் மழைநீர் அடைப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் உள்ள 28 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 190 தற்காலிக பாதுகாப்பு இடங்கள் தயார் நிலையில் உள்ளன. தேவை ஏற்படும் எனில் உடனடியாக இந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரிகள் மூலம் பணிகள் விரைவாக செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் 21 அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு துறையில் இருந்தும் ஒரு அதிகாரிகள் இடம் பெற்று உள்ளார்கள். எந்த அசம்பாவிதமும் ஏற்படா வகையில் அவர்கள் உடனடியாக அதை சரி செய்து கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.