கடலூர் மாவட்டத்தில் உள்ள காவலர்களின் குறைகளை தீர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் வழிகாட்டுதலின்படி 'Connect App' என்ற புதிய செயலி என்எல்சி நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் கடலூர் மாவட்டத்தில் காவலர்களுக்கு ஏற்படும் ஊதிய குறைபாடு, பதவி உயர்வு, பணி இடமாற்றம், ஈட்டிய விடுப்பு, பொது வைப்பு நிதி மேலும் பிற குறைகளையும் காவல் துறையினர் புகார்களாக தெரிவிக்கும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் காவலர்கள் இந்த செயலி மூலமாகவே புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செயலியை கண்காணித்து இதன் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி திரட்டிய காவலர்கள்