ETV Bharat / state

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - Music College Admission Started

கடலூர்: அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியுள்ளார்.

Music College Admission Started
author img

By

Published : May 30, 2019, 12:54 PM IST

அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ’கடலூர் அரசு இசைப் பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் முதலிய ஏழு கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழு நேரமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2019-20ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்றுவருகிறது. 2012-13ஆம் ஆண்டு முதல் அரசாணைப்படி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதந்தோறும் கல்வித் தொகை ரூ.400 வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அரசு இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசப் பேருந்து பயண அட்டை, அரசு விடுதி வசதி, சலுகைக் கட்டணத்தில் தொடர்வண்டிப் பயண வசதி, ஆகிய வசதிகள் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டுவருகின்றன.

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககத்தால், அரசு தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அரசு இசைப் பள்ளியில் முந்தைய காலங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் குரலிசை ஆசிரியர்களாகவும், பரதநாட்டிய ஆசிரியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இசைப் பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் நாதஸ்வர கலைஞராகவும், தவில் கலைஞராகவும், தேவார ஓதுவார் முதலிய பணிகள் பெற்றிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

மேலும், மாணவர்கள் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், பகுதி நேரமாக இசை மற்றும் பரதநாட்டியம் வகுப்புகள் நடத்துவதன் வாயிலாகச் சுயதொழில் முனைபவர்களாகச் செயல்பட்டு, பொருளாதார அடிப்படையிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகவே, இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடலூர் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
கடலூர்
மே 29,
கடலூர் அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியதாவது; கடலூர் அரசு இசைப் பள்ளியில் குரலிசை (வாய்ப்பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் முதலிய ஏழு கலைகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக
பயிற்றுவிக்கப்படுகிறது. கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2019-20-ஆம் ஆண்டுக்கான
மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. 2012-13-ஆம் ஆண்டு முதல் அரசாணை படி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை
ஊக்கப்படுத்தும் விதமாக மாதந்தோறும் கல்வித் தொகை ரூ.400 வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அரசு
இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவசப் பேருந்து பயண
அட்டை, அரசு விடுதி வசதி சலுகைக் கட்டணத்தில் புகைவண்டி பயண வசதி, ஆகிய
வசதிகள் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு நிறைவு
செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககத்தால், அரசு தேர்வுகள்
நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடலூர்
மாவட்ட அரசு இசைப்பள்ளியில் முந்தைய காலங்களில் பயின்று தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குரலிசை ஆசிரியர்களாகவும்,
பரதநாட்டிய ஆசிரியர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மாவட்ட வேலை வாய்ப்பு
அலுவலகத்தின் மூலமாக இசைப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழக அரசின்
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் நாதசுர கலைஞராகவும், தவில்
கலைஞராகவும், தேவார ஒதுவார் முதலிய பணிகள் பெற்றிட அதிகப்படியான
வாய்ப்புகள் உள்ளன.
மேலும், மாணவர்கள் இசைக் கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், பகுதி
நேரமாக இசை மற்றும் பரதநாட்டியம் வகுப்புகள் நடத்துவதன் வாயிலாக சுயதொழில்
முனைபவர்களாக செயல்பட்டு, பொருளாதார அடிப்படையிலும் முன்னேற்றம் அடைந்து
வருகிறார்கள்.
ஆகவே, இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப்
பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்கள்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.