கடலூர் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி சாத்தமாம்பட்டு விஜய் என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அந்தப் புகாரில், தனது தந்தை பஞ்சன் (47) சந்தேகத்திற்கிடமான வகையில் சாத்தமாம்பட்டு முந்திரி தோப்பில் இறந்து கிடந்திருந்ததாகவும், இது குறித்து காவல் துறை முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரைப் பதிவுசெய்த காவல் துறையினர் கொலை குறித்து நடுவீரப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர், நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் வீரமணி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பஞ்சன் அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமாரிடம் மது வாங்கி குடித்துள்ளார். அப்போது பஞ்சனுக்கும் சசிகுமாருக்கும் ஏற்பட்ட தகராறில், சசிகுமார் தனது நண்பர் ஜெயபிரகாஷ் உடன் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சசிக்குமார், ஜெயபிரகாஷை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்ட சசிக்குமார், ஜெயபிரகாஷ் மீது காவல் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டுவருகிறது.
இதனையடுத்து இவர்களின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும்பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின்பேரில் சசிக்குமார், ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.