கடலூர் முதுநகர் சலங்கைக்காரத் தெருவைச் சேர்ந்த தம்பதியர் ரவி- பூங்கொடி. இவர்களது மகள் மீனா. இவருக்கும் சோனங்குப்பத்தைச் சேர்ந்த நம்புராஜ் என்பவருக்கும் திருமணமாகி, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறால் மீனா தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். இதையடுத்து நம்பிராஜ், தனது மாமியார் வீட்டிற்குச் சென்று சமாதானம் பேசியுள்ளார். ஆனால் அதற்கு மீனா உடன்படாமல், தனது தாய் வீட்டிலேயே தங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த நம்பிராஜன், மனைவி, மாமியாரைப் பின்தொடர்ந்து முதுநகர் காவல் நிலையம் அருகே கடைவீதியில் சென்றபோது இருவரையும் சராமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதுநகர் காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய நம்பிராஜை வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கஞ்சா போதையில் கொலையான இரு இளைஞர்கள்: நண்பர்களிடம் விசாரணை