கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரான கோ.அய்யப்பன் (63), தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கட்சியினருடன் இணைந்து கடந்த சில நாட்களாக கரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அவர் பரிசோதனை செய்து கொண்டார். கடந்த மே 22ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், "தனது உடல் நிலை சீராக உள்ளதாகவும், அனைவரும் தமிழ்நாடு அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டுக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் உறுதி: சாதித்துக் காட்டுவாரா பிடிஆர்?