கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி. சம்பத் ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில், அம்மா பேரவை பொருளாளர் மதியழகன், அதிமுக வழக்கறிஞர் பிரிவு பாலகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அதிமுக தமிழ்ச்செல்வன், கடலூர் ஒன்றியப் பெருந்தலைவர் பக்கிரி, அதிமுக முக்கியப் பிரமுகர் ஒப்பந்ததாரர் சுரேஷ் ஆகியோரின் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெற்றது.