கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி ரத்னா (34). இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன், அருணா ஆகியோர் ஜாமீனில் விடுதலையாகி வெளியில் வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 28ஆம் தேதி காலை 8 மணியளவில் ரத்னா விருத்தாசலத்தில் உள்ள சந்தைக்கு சென்றுள்ளார். அப்போது ரத்னாவை கண்ட அருணா அவரை வழிமறித்து ஆபாசமாக திட்டியுள்ளார், மேலும் நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியள்ளார்.
இதனையடுத்து ரத்னா விருத்தாசலம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் காவல் துறையினர் அருணாவை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து அருணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதன் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அருணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையும் படிங்க : மண உறவுக்கு வெளியேயான உறவு: பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றி கொன்றவர் கைது!