ETV Bharat / state

ஷேர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது - கள்ளச்சாராயம் கடத்தல்

கடலூர்: ஷேர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திய டிரைவரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

liquor smuggling
author img

By

Published : Jul 16, 2019, 1:47 PM IST

புதுவை மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மதுபானம், கள்ள சாராயம் கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதனைதொடர்ந்து காவல் ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

ஷேர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தியவர் கைது

அப்போது அந்த வழியே வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரித்ததில், திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மேலும் ஆட்டோவில் இருந்த 750லிட்டர் கள்ளசாராயத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:ஷேர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திய டிரைவர் கைதுBody:கடலூர்
ஜூலை 16,

ஷேர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திய டிரைவரை கடலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

புதுவை மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மதுபானம் மற்றும் கள்ள சாராயம் கடத்துவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பிரசன்னா தலைமையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ரமணி, விபீஷணன், இளஞ்செழியன் ஆகியோர் ஆல் பேட்டை சோதனைச் சாவடியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ போலீசார் நிறுத்தும்படி கையசைத்து உள்ளனர் ஆனால் ஆட்டோ டிரைவர் அதைப் பொருட்படுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார் இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஷேர் ஆட்டோவை பின் தொடர்ந்து கடலூர் மஞ்சக் குப்பம் மணிக்கூண்டு அருகில் மடக்கிப்பிடித்து ஆட்டோவில் சோதனை நடத்தினர் இதில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராயம் இருந்தனை கண்டு போலீசார் ஆட்டோ ஓட்டுனர், ஆட்டோ மற்றும் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரணை நடத்திய போலீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் மணிகண்டன் (25) என்பது தெரியவந்தது இதனை தொடர்ந்து புதுவையிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆட்டோ மூலம் சாராயத்தை கடத்தி வந்து கடலூரில் பல பகுதிகளுக்கு விற்பனை செய்து வருவதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு போலீசார் திருப்பாதிரிபுலியூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் கடத்திவரப்பட்ட 750 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்தனர். இதேபோல் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் இருந்து கடலூருக்கு மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தப்படுவது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.