ETV Bharat / state

விருத்தாசலத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் - 2019 paralimentary election

கடலுார்: விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

viruthachalam
author img

By

Published : Mar 29, 2019, 2:46 PM IST

தமிழ்நாட்டில் மக்களவை, 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது. மேலும், தேர்தல் குறித்து பல்வேறு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், கடலுார் மாவட்டம் விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சார் ஆட்சியர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். தேர்தல் பொது பார்வையாளர் ஜிபி.படேல் தலைமை தாங்கி பேசுகையில், மக்களவைத் தேர்தல் தலைமை அமைதியாக எவ்வித இடையூமின்றி நடத்த வேண்டும்.

விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட நகரம், கிராமங்கள், பொது இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகள், கொடிகள், தோரணங்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கவனித்து அலுவலர்கள் அதனை அகற்ற வேண்டும்.

மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம்

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து சரிசெய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியர் கவியரசு, வருவாய், நகராட்சி, ஊராட்சி ஒன்றி அலுவலர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திர பட்டினம், நகராட்சி துவக்கப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Intro:விருதாச்சலத்தில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது

Body:கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சார் ஆட்சியர் அலுவலகம் லோக்சபா தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது

இதில் ஒரு தான் சார் ஆட்சியர் பிரசாந்த் முன்னிலை வகித்த தேர்தல் பொது பார்வையாளர் ஜிபி.படேல் தலைமை தாங்கி பேசுகையில் லோக்சபா தேர்தல் தலைமை அமைதியாக எவ்வித இடையூறும் இன்றி நடத்த வேண்டும் விருத்தாச்சலம் விருதாச்சலம் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட நகரம் கிராமங்களில் பொது இடங்களில் டிஜிடல் பேனர்கள் கட் அவுட்டுகள் கொடிகள் தோரணங்கள் வைக்கப்பட்டுள்ள என்பதை அதிகாரிகள் கண்காணித்து அகற்ற வேண்டும்

ஓட்டுச்சாவடி மையங்களில் குடிநீர் மின்சாரம் கழிவறை மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்றார் கூட்டத்தில் தாசில்தார் கவியரசு வருவாய் நகராட்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்றனர் தொடர்ந்து தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திர பட்டினம் மற்றும் நகராட்சி துவக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் என அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.