கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மகன் பிரசாந்த் (26). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (22) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரசாந்திற்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதையறிந்த ஆனந்தி ரெட்டிக்குப்பத்தில் உள்ள காதலன் வீட்டிற்கு வந்து பிரசாந்தை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை காவல் துறையினர் கல்லூரி மாணவி ஆனந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.