ETV Bharat / state

உளுந்து ஏற்றி வந்த லாரியில் திடீரென தீ விபத்து! - கடலூர் உளுந்து ஏற்றி வந்த லாரியில் திடீரென தீவிபத்து

கடலூர்: சிதம்பரத்தில் உளுந்து ஏற்றி வந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் செய்திகள்
உளுந்து ஏற்றி வந்த லாரியில் திடீரென தீவிபத்து!
author img

By

Published : May 5, 2021, 10:54 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து லால்கான் தெருவில் உள்ள குமார் என்பவருக்கு சொந்தமான லாரி, சுமார் 500 உளுந்து மூட்டையை ஏற்றிக்கொண்டு கொல்கத்தா நோக்கி புறப்பட்டது. லாரியை சங்ககிரியை சேர்ந்த கோபி என்பவர் ஓட்டி வந்தார். லாரி புறப்பட்டு சிறிது தூரத்தில், திடீரென இன்ஜினில் எலக்ட்ரிக் ஷாட் ஆகி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனால் பதற்றம் அடைந்த ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டார். ஆனால், தீயை அணைக்க முடியாததால் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி, வீரசேகர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து லாரியில் உள்ள தீயை அணைத்தனர்.

மேலும், அதிலிருந்த 50 டன் உளுந்தும் சேதமின்றி காப்பாற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்கான முக்கிய காரணம் - மநீம துணைத் தலைவர் பொன்ராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.