ETV Bharat / state

சாதிய வன்மத்தால் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை! - பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் புகார்! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கடலூர்: சாதிய வன்மத்தை உமிழும் விதமாக விவசாயியை கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முத்தையன் என்கிற விவசாயி புகார் மனு அளித்துள்ளார்.

விவசாயிக்கு கொலை மிரட்டல் - பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!
author img

By

Published : May 14, 2019, 11:36 PM IST

கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரத்தில் வசிப்பவர் முத்தையன்(58). பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவருக்குச் சொந்தமாக உள்ள 13 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், முத்தையன் மகள் திருமண செலவிற்காக 2015ஆம் ஆண்டு தன்னுடைய 52 சென்ட் நிலத்தை சீத்தாபதி என்பவரிடம் அன்றைய மதிப்பில் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு வாய்மொழியாக ஒப்பந்தம் போட்டு கிரயம் செய்து கொடுத்துள்ளார். அதன் பேரில் சீத்தாபதி அந்த நிலத்தில் பயிர் செய்து வந்துள்ளார். இந்நிலையில், 2018ஆம் ஆண்டு சீத்தாபதி முத்தயனிடம் திடீரென பணத்தை திருப்பிக் கேட்டு மிரட்டியுள்ளார்.

சாதிய வன்மத்தால் விவசாயிக்கு நேர்ந்த கொடுமை! - பாதுகாப்பு கோரி எஸ்.பி.யிடம் புகார்!

அதோடு மட்டுமின்றி, முத்தையனை குள்ளஞ்சாவடி பகுதிக்கு அழைத்துச் சென்று, சாதி பெயரை குறிப்பிட்டு இழிவுப்படுத்தி, 10 அடியாட்களை வைத்து அடித்து வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாகவும், அவருடைய விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை எல்லாம் சேதப்படுத்தியதாகவும் சீத்தாபதி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து, முத்தையன் மனித உரிமை செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வழக்கறிஞர் இல.திருமாணி உதவியுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகாரை விசாரிக்கும் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ஒருதலைபட்சமாக செயல்படுவதால் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் அவர் தற்போது புகார் மனு அளித்துள்ளார்.

Intro:நிலத்தை கேட்டு விவசாயிக்கு கொலை மிரட்டல் பாதுகாப்பு வழங்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

Body:கடலூர்
மே 14,

கடலூரில் தன்னுடைய நிலத்தை தர மறுத்த விவசாயியை சாதியை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணனிடம் புகார் மனு அளித்துள்ளார் விவசாயி ஒருவர்.

கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரத்தில் வசிப்பவர் முத்தையன்(58) பழங்குடி இனமான காட்டுநாயக்கன் சாதியை சேர்ந்தவர். இவர் அவ்வூரில் தனக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய மகள் திருமண செலவிற்காக 2015ஆம் ஆண்டு முத்தையன் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு சீத்தாபதி என்பவரிடம் 52 சென்ட் தன்னுடைய நிலத்தை அன்றைய மதிப்பில் வாய்மொழியாக ஒப்பந்தம் போட்டு கிரயம் செய்து கொடுத்து உள்ளார். இதனைத் தொடர்ந்து சீத்தாபதி அந்த நிலத்தில் பயிர் செய்து வந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு சீத்தாபதி முத்தயனிடம் திடீரென எனக்கு நிலம் வேண்டாம் பணத்தை திருப்பிக் கொடு எனக் கூறியுள்ளார். உடனே முத்தையன் நிலத்தை வேறு நபரிடம் விற்று பணத்தை சீத்தாபதியிடம் கொடுக்கும்போது அதை வாங்க மறுத்து ஐந்து பைசா வட்டி போட்டு கேட்டுள்ளார் மேலும் சாதியைச் சொல்லி இழிவாகப் திட்டியதாக கூறப்படுகிறது.

2019 ஏப்ரல் 10ஆம் தேதி குள்ளஞ்சாவடி முத்தையன் என்னை அழைத்து சுமார் 10 அடியாட்களைக் கொண்டு அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்து மிரட்டி எழுதாத 2பத்திரம் 3 பச்சை பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ளதாகவும் அவருடைய விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை எல்லாம் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

உடனே முத்தையன் சசி மனித உரிமை செயல்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வழக்கறிஞர் இல.திருமாணி உதவியுடன் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆணையங்களுக்கு புகார் மனு அளித்துள்ளார்.

புகாரை விசாரிக்கும் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் எனக்கூறியும் தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.